Who will be the next Chief Minister of Delhi

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் பேரில், உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

Advertisment

அதன் பிறகு, மக்களவைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 2ஆம் தேதி, திகார் சிறையில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து, ஜூன் 26ஆம் தேதி இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ கைது செய்தது. இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும். சி.பி.ஐ கைது செய்ததன் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே இருந்து வந்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து கெஜ்ரிவால் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. சிபிஐ கைது செய்த வழக்கில், பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதன் பேரில், கடந்த 13ஆம் தேதி திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வந்தார். ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கெஜ்ரிவால் இரண்டு நாட்களில் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்த இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ‘அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நவம்பர் மாதம் நடைபெறும் மஹாராஷ்டிரா தேர்தலுடன் டெல்லி தேர்தலும் நடக்க வேண்டும். நான் நேர்மையானவன் என மக்கள் நினைத்தால் மீண்டும் எனக்கு வாக்களிக்கட்டும். தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பிறகுதான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வேன்’ என்று கூறினார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த திடீர் அறிவிப்பு, ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம், அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதவி விலகுவதாகக் கூறப்படுவதால், டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Advertisment

Who will be the next Chief Minister of Delhi

டெல்லியின் அடுத்த முதல்வர் பதவியில் அமர, அரவிந்த் கெஜ்ரிவாலி மனைவி சுனிதா கெஜ்ரிவா டெல்லி அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய், செளரப் பரத்வாஜ் ஆகிய யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவுக்கு அரசியலில் அதிகப்படியான அனுபவம் இல்லாததால் அவருக்கு வாய்ப்பு குறைவு எனக் கூறப்படுகிறது. டெல்லியில் நீர்வளத்துறை உள்பட 14 துறைகளை கவனித்து வரும் அதிஷி, கெஜ்ரிவால் கைதுக்குப்பின் மாநில அரசை வழிநடத்தியதில் முக்கிய பங்கு வகித்தார். இதனால், அவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய செளரப் பரத்வாஜ் அல்லது, போக்குவரத்து அமைச்சராக இருக்கக்கூடிய கோபால் ராய் ஆகிய இவர்களில் யாரேனும்ஒருவருக்குமுதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.