Advertisment

உச்சநீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதி யார்?

Who will be the next Chief Justice of the Supreme Court?

Advertisment

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என பரிந்துரைக்குமாறு, தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித்திடம், மத்திய சட்ட அமைச்சகம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் அடுத்த மாதம் 8- ஆம் தேதியுடன் ஓய்வுப் பெறவுள்ளார். அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை அவர் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த மூத்த நீதிபதியாக சந்திரசூட் இருப்பதால், அவரது பெயரை லலித் பரிந்துரைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

சந்திரசூட் பெயர் பரிந்துரைக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக அவர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe