Advertisment

யாருக்கு என்ன பலம்!! ஆளுங்கட்சியா ? எதிர்கட்சியா?

govt

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இன்று நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றிய விவாதம் மற்றும் வாக்குக்கெடுப்பு நடைபெறும் என 18-ஆம் தேதி நடந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளே தெலுங்குதேசம் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டசபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இன்று நடக்கவிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் அடிப்படையில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது. இந்நிலையில் இன்று நடக்கும்நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றிய விவாதத்திற்கு முன் யாருக்கும் எவ்வளவு பலம் என்பதையும், உறுப்பினர்கள் எண்ணிக்கையும் பற்றி பார்ப்போம்.

மொத்தம் உள்ள இடங்கள் 543, பெரும்பான்மையை நிரூபிக்க 268 இடங்கள் தேவைப்படுகிறது. காலியிடங்கள் 10. தற்போது ஆட்சியிலுள்ள பாஜகவின் கூட்டணி பலம் மொத்தம் 313 எம்.பிக்கள் அவர்களில் 274 பாஜக (சபாநாயகர் சேர்ந்து )+39 கூட்டணி.பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசிற்கு 48 எம்.பிக்கள் +கூட்டணி 18 எம்.பிக்கள் என மொத்தம் 66 எம்.பிக்கள்.

பாஜக பலம்

மொத்த ஆதரவு எம்.பிக்கள் 313

பாஜக-------------------------------------------274

சிவசேனா -----------------------------------18

லோக் ஜனசக்தி --------------------------6

சிரோமணி அகாலிதளம்-------------4

ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி-----3

ஐக்கிய ஜனதா தளம் ------------------2

அப்னா தளம்------------------------------1

பாமக-----------------------------------------1

தேசிய மக்கள் கட்சி-------------------1

என்.ஆர். காங்கிரஸ் ------------------1

சிக்கிம் ஜனநாயக முன்னணி----1

எதிர்க்கட்சி எம்.பிக்கள் எண்ணிகை

காங்கிரஸ் கூட்டணி----------------66

அதிமுக------------------------------------37

திரிணாமுல் காங்கிரஸ்-----------34

பிஜு ஜனதா தளம்--------------------20

தெலுங்குதேசம்-----------------------16

தெலுங்கானா ராஷ்டிர சமிதி--11

மார்க்சிஸ்ட் கம்யூனிஸட்-------9

சமாஜ்வாடி -----------------------------7

மற்றவை--------------------------------20

இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் நம்பிக்கையில்லாதீர்மானத்தின் மீதான விவாதங்களின் அடிப்படையில் யாருக்கு பெரும்பான்மை என இன்று தெரிந்துவிடும்.

parliamentary congress modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe