publive-image

கேரளாவில் மீன் விற்று படிப்பை தொடர்ந்து வந்த ஹனன் என்றமாணவியை பற்றி இணையத்தளத்தில்அவதூறு விமர்சனங்களை பரப்பிய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கேரளாவில் தொழுப்புழாவில் வசித்துவரும்21 வயதுடைய கல்லூரி மாணவி ஹனன் இவர் தனது ஏழ்மையான குடும்ப சூழலில் பகுதிநேரமாக மீன் வியாபாரம் செய்துகொண்டு ஒரு தனியார் கல்லூரியில் பட்டயப்படிப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் கேரளாவிலுள்ள ''மாத்ருபூமி'' என்ற இதழில் அவரது வாழ்க்கை தொடரும், அவர் அன்றாட வாழ்க்கை நடைமுறை சிக்கல்கள் பற்றிய வீடியோவும் வெளியானது.

Advertisment

HANAN

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அவருடைய வாழ்கை தொடர்சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும் அவருக்கு ஆதரவாக பலர் குரல்கொடுத்து வந்தனர். இந்நிலையில் சில நெட்டிசன்கள் இந்த தொடர் போலியானது என கிண்டல் செய்தும், தாறுமாறாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஹனனின் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அவரது உறவினர்கள் என பலர் அவருக்கு ஆதரவாக குரல்கொடுத்து இதழில் வெளியான தொடர் உண்மையானதுதான் என கூறிவந்தனர். அதோபோல் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தனம், அவரது பேஸ்புக் பதிவில் ''கடினமான வாழ்க்கையை எதிர்த்து போராடும் மாணவி ஹனனை தூற்றுவதை நிறுத்துங்கள் என அவரை விமர்சித்தவர்கள் வாயடைக்கும்படி கூறியிருந்தார்.

Advertisment

HANAN

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இருந்தும் கடுமையான விமர்சனங்களால் மனமுடைந்து போன ஹனன் தன்னை கடுமையாக விமர்சித்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் ''நான் உங்களிடம் எதுவும் கேட்கவில்லை, நீங்கள் எனக்கு எந்த உதவியும் செய்யவேண்டாம். இயன்ற வேலையை செய்து என் படிப்பையும் என்குடும்பத்தையும் பார்த்துக்கொள்வதுதான் எனது நோக்கம் எனவே என்னை தனிமையில் விட்டுவிடுங்கள்'' என கூறியுள்ளார். ஒரு மாணவியை மனமுடைய செய்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஹனனை பற்றி தவறான கருத்துக்களை பரப்பியவர்களை பற்றி கொச்சின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வயநாட்டை சேர்ந்தநூருதீன் ஷேக் என்றவாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.