Advertisment

மோடி ஆட்டோகிராஃப் போட்ட மாணவிக்கு வந்து குவியும் வரன்கள்!!

பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பெண்ணுக்கு வரன்கள் குவிந்து வருவதாக அந்த பெண்ணின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள மித்னாப்பூர் என்னும் பகுதியில் நடந்த பேரணியில் கலந்துகொண்டு பேசியபோது .கீழே மோடியின் பேச்சை கவனிக்க வந்த தொண்டர்கள் மற்றும் மக்கள் இருக்கும் பகுதியில் திடீரென மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் பல மக்கள் சிக்கிக்கொண்டு காயமடைந்தனர். மேடையில் பேசிக்கொண்டிருந்த மோடி, அந்த விபத்து நடந்தவுடன் தனது எஸ்பிஜி குழுவை சென்று மக்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க செய்யுங்கள் என்றார்.

Advertisment

modi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் காயமடைந்த தொண்டர்களை பார்த்து நலம் விசாரிக்க சென்றார்.

அப்போதுமோடி காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒவ்வொருவர் அருகிலும் சென்று நலம் விசாரித்தார்,தன்னையும் அறியாமல் பின்னர் கண்கலங்கினார் மோடி. அப்போது காயம்பட்டு படுக்கையில் கிடந்த ரிதா என்ற கல்லூரி மாணவி மோடியிடம் எனக்கு ஒரு ஆட்டோகிராப் போட்டுக்கொடுங்கள் என்று காயத்துடன் ஆசையாக கேட்க மோடியும் அவருக்கு ஆட்டோகிராப் போட்டுத்தந்தார். அவர் அந்த மாணவியின் கையில் ஆட்டோகிராஃப் போடுவது போன்ற புகைப்படமும் வலைதளங்களில் உலா வந்த நிலையில் மிகவும் பிரபலமாகிவிட்ட ரிதாவிற்கு வரன்கள் குவிந்து வருவதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ரிதா கல்லூரி படிப்பதால் இதை பெரிதுபடுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Women modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe