'When will statehood be given to Jammu and Kashmir'-Central Government's response

'ஜம்மு காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பதை காலவரையறையிட்டு சொல்ல முடியாது' என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த பிரிவு 370 சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், பிரிவு 370 ஏன் நீக்கப்பட்டது; அதற்கான நோக்கம் என்ன உள்ளிட்ட காரணங்களை மத்திய அரசிடம் தலைமை நீதிபதி கேட்டிருந்தார்.

Advertisment

அதற்கான பதிலைத்தற்பொழுது மத்திய அரசு கொடுத்துள்ளது. ‘பிரிவு 370 நீக்கப்பட்ட 2018 முதல் 2023 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தீவிரவாத தாக்குதல்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 45.2% குறைந்துள்ளது. கற்களை வீசுவது, அசம்பாவித சம்பவங்கள் நடத்துவது உள்ளிட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் 97 சதவீதம் வரை குறைந்துள்ளது. ராணுவ வீரர்களின் உயிரிழப்பு 65 சதவீதம் குறைந்துள்ளது. தீவிரவாதிகளிடம் சென்று சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெற்று மாநிலத்தில் செட்டில் ஆகி வருகிறார்கள். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் பிரிவு 370 நீக்கியதால் நடந்துள்ளது.

அங்கு தேர்தல் நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலில் பஞ்சாயத்து அளவிலான தேர்தல் நடத்த வேண்டும். அதற்குப் பிறகு மாநிலத்தேர்தலை நடத்த வேண்டும். மாநில அந்தஸ்து வழங்குவதற்கு முன் அதற்காக ஜம்மு காஷ்மீரை தயார்படுத்த வேண்டியுள்ளது. அதேநேரம் ஜம்மு காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பதை காலவரையறையிட்டு சொல்ல முடியாது' என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment