When will the budget be presented in Puducherry?

புதுச்சேரி சட்டப்பேரவையில் வருகிற ஆகஸ்ட் 23- ஆம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

புதுச்சேரி மாநிலத்தில் 15வது சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடர், கடந்த ஆகஸ்ட் 10- ஆம் தேதி அன்று துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்காததால், பேரவைக் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், 10,696 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் 22- ஆம் தேதி அன்று புதுச்சேரி மாநில சட்டப்பேரவைகூட உள்ளதாகவும், அதில் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் பேரவையின் செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.