CORONAVIRUS PEOPLES PREVENTION WHAT DO

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்துவந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பாதிப்பும்உயிரிழப்பும் கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்துவருகிறது. பொதுமக்கள் வெளியில் வந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளன.

Advertisment

'இப்படியும் கரோனா வைரஸ் பரவக்கூடும், கவனம் தேவை!'

வைரஸ் பரிமாற்றத்தின் வழிகள்:

1.பனிப்படலம்.

2. நீர்த்துளிகள்.

3. மேற்பரப்பு.

பாதிக்கப்பட்ட நபரின்உடலில் கரோனா நுண்ணுயிர் பெருகும்.மேலும் பிறருக்குசுவாசித்தல், பேசுதல், பாடுதல், சிரித்தல், இருமல் மற்றும் தும்மல் மூலமாக பரவும்.

Advertisment

அறிகுறியற்ற பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் கூட ‘வைரஸ் நிறைந்த’ நீர்த்துளிகளை விடுவிக்க முடியும், அதுபலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, நோய்த் தொற்றின் எந்த அறிகுறிகளும் இல்லாத நபர்களோடு இருக்கும்போது கூட முகக்கவசத்தை அணியுங்கள்.

Advertisment

எப்பொழுது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்?

பொதுவான அறிகுறிகள்:

1.காய்ச்சல்.

2. வறட்டு இருமல்.

3. சோர்வு.

4. மணம், சுவை இழத்தல்.

இதர அறிகுறிகள்:

1. தொண்டை வலி.

2. உடல் அல்லது தலைவலி.

3. வயிற்றுப்போக்கு.

4. சரும அரிப்பு.

5. கண்கள் சிவப்படைதல்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.