Advertisment

"பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாதபோது.." - சர்ச்சையை ஏற்படுத்திய முன்னாள் சபாநாயகர் பேச்சு!

sdfh

பாலியல் பலாத்காரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எம்எல்ஏக்கு அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனம் குவிந்துவருகிறது.

Advertisment

கர்நாடக சட்டப்பேரவையில் மழை தொடர்பாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிஉறுப்பினர்கள் பேச வேண்டும் என்று கோஷம் போட்டனர். அப்போது சபாநாயகர் அனைவரையும் அமரும்படி கேட்டுக்கொண்டார். இருந்தும் விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடுதல் நேரம் வேண்டும் என்று தொடர்ந்து கூச்சலிட்டு வந்தனர். இதனால் பொறுமையிழந்த சபாநாயகர், "அனைவரும் மகிழ்ச்சி அடையுங்கள், அனைத்திற்கும் ஆமாம் போடும் நிலைக்குத் தற்போது நான் வந்துவிட்டேன், நீங்கள் தொடர்ந்து கூச்சலிடுங்கள்" என்று கோவமாக கூறினார்.

Advertisment

இதைக் கேட்ட முன்னாள் சபாநாயகரும், தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏவும் ஆன ரமேஷ் குமார், "பாலியல் பலாத்காரத்தைத் தவிர்க்க முடியாதபோது அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதுபோலத்தான் உங்கள் நிலைமையும் உள்ளது" என்றார். இதுவாவது பரவாயில்லை, ரமேஷ் குமாரைத்தூக்கிச் சாப்பிடும் விதமாத சபாநாயர், "இது உங்களின் சொந்த அனுபவம் போல்" எனக் கூறி அவைக்கு மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe