ADVERTISEMENT

கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எப்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்? - தேசிய ஆலோசனை குழு பரிந்துரை!

01:40 PM May 13, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனையடுத்து, ஏற்கனவே மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளில் 70 சதவீதத்தை இரண்டாம் டோஸ் செலுத்தவே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், நோய்த் தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்வதற்கான கால இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பாலூட்டும் தாய்மார்கள் பிரசவத்திற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசிடம் நோய்த் தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளதாக கூறியுள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை 6 மாத காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் எனவும் அந்த ஆலோசனக் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT