வாட்ஸ் ஆப்பில் விரும்பத்தகாத தகவல்கள் வரும்போது அதுகுறித்து மத்‌திய தொலைத்தொடர்புத் துறையிடம் புகார் தெரிவிக்கலாம் என தகவல்தொடர்புத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி ஆஷிஷ் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

whatsapp

வாட்ஸ் ஆப்பில் மிரட்டல், வலுக்கட்டாயமாக நிர்பந்திப்பது அல்லது ஆபாசமாக பேசுவது, அனுப்புவது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் நபரின் மொபைல் எண்ணையும் அவர் அனுப்பிய குறுந்தகவலையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இரண்டையும் ‘[email protected]’ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

பாதிக்கப்பட்டவர் தரும் புகார் சம்மந்த‌ப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கும், காவல் நிலையத்துக்கும் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவத்தில், வாடிக்கையாளருக்கு விரும்பத்தகாத தகவல்கள் அனுப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்திருப்பதை குறிப்பிட்ட ஆஷிஷ் ஜோஷி, அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது மொபைல் ஃபோன் நிறுவனங்களின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisment