Skip to main content

வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்... தகவல்கள் தானாக அழிகிறது...!

2018-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வாட்ஸ் ஆப் நிறுவனம், குரூப் வீடியோ கால் செய்துகொள்ளும் வசதியை அறிமுகம் செய்தது.  அதன்பின்  புதிய குரூப்பில் இணைவதற்கும் அதில் அட்மின் ஆகுவதற்கும் புதிய அப்டேட்டை அந்நிறுவனம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்திருந்தது. 

 

whatsapp

 

அதன்பின் சமீபத்தில் வாட்ஸ்அப் குரூப்களில் அனுப்படும் மெசெஜ்களில் குறிப்பட்ட நபரின் மெசேஜை விரைவில் தேடும் வகையில் ‘அட்வான்ஸ் சர்ஜ்’ என்ற தேடல் அப்டேட் ஒன்றை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் பீட்டா வெர்சனின் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால் இந்த அப்டேட்டில் பக் இருப்பதால் போட்டோக்கள் உட்பட சில மீடியா ஃபைல்கள் தானாகவே அழிவதாகவும் கூறப்படுகிறது. 
 

ஆண்ட்ராய்டின் வாட்ஸ்அப் 2.19.66 பதிப்பில் இந்த குறைபாடு இருக்கிறது. மேலும் நண்பர்களின் சில ஸ்டேட்டஸில் உள்ள புகைப்படம் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது வாட்ஸ் அப்பில் சோதனை தளமான பீட்டா வெர்ஷனில் மட்டுமே வருகிறது. இந்த குறைபாடு முழுமையாக சரி செய்யப்பட்டே அதிகாரப்பூர்வ அப்டேட்டாக விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்