Advertisment

அரெஸ்ட் ஆன அட்மின்கள்; வாட்ஸ்அப் உபயோகிப்போர் கவனத்திற்கு...

hbvhgvgb

கேரளாவை சேர்ந்த 29 வயதான அனூப் என்பவருக்கும், 27 வயதான ஜூபி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் மணம் முடித்தனர். இந்நிலையில் ஜூபி என்ற அந்த பெண் பார்க்க குண்டாக வயதானவர் போல இருந்ததால் அங்குள்ள வாட்ஸ்அப் குரூப்களில் அந்த பெண்ணுக்கு 48 வயது மணமகனுக்கு 29 வயது என புரளிகள் பரப்பப்பட்டன. வயதான பெண்ணை பணத்திற்காக அந்த இளைஞர் திருமணம் செய்துகொண்டார் என வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது. இதனால் வேதனையடைந்த அந்த தம்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்தது. இதன் பேரில் இந்த தகவலை பரப்பிய 11 வாட்ஸ்அப் குழு அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தொடர்ந்து கைது செய்து செய்யப்படுவர் என காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் வரும் காலத்தில் இது போன்ற பொய் செய்திகள் பரப்புவோர் மீது புகார் கொடுத்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வாட்சப் குரூப் அட்மின்கள் பார்த்து செயல்பட வேண்டும் என்பதற்கு இந்த விஷயமே போதும் என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

Advertisment

Fake News Kerala whatsapp
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe