BUDGET 2021

2021-2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்இன்று தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு வரிவிதிப்புககளும், வரிக்குறைப்புகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் பல்வேறு பொருள்களின் விலைகள்ஏறவும், இறங்கவும் உள்ளது.

Advertisment

இந்த பட்ஜெட்டினால் விலையேறவுள்ள பொருட்கள்:

பருத்தி, மொபைல் ஃபோன்கள், மொபைல் சார்ஜர்கள், ரத்தினக் கற்கள்,எல்.ஈ.டி சாதனங்கள், எத்தனால், கச்சா பாமாயில், கார்கள், மின்னணு உபகரணங்கள், தோல் பொருட்கள், காலணிகள், வீட்டு உபகரணங்கள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும். கம்ப்ரசர்களுக்கான சுங்கவரி உயர்வால், குளிர்சாதனப்பெட்டிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ/சிவிலையும்உயர வாய்ப்புள்ளது. பாதுகாப்பு கண்ணாடிகளின் மீதான சுங்கவரி உயர்வால்மோட்டர்வாகனங்களின் விலையும்அதிகரிக்கும்.

Advertisment

இந்த பட்ஜெட்டினால் விலைகுறையவுள்ள பொருட்கள்:

நைலான் உடைகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்கள்ஆகியவற்றின் விலை குறையவுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 12.5-ல் இருந்து 7.5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலை குறைவுசாத்தியமாகியுள்ளது. மேலும், ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்களின் விலையும்குறையவுள்ளது.