Skip to main content

பறவைக் காய்ச்சல் நேரத்தில் சிக்கன், முட்டை ஆகியவற்றைச் சாப்பிடலாமா..? உலக சுகாதார அமைப்பு சொல்வதென்ன..?

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

what who say about eating chicken during bird flu time

 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவிவரும் சூழலில், கோழி, வாத்து போன்ற பறவைகளின் கறியைச் சாப்பிடலாமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. 

 

கேரளா, இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பறவைகளுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்5 என்1 எனப்படும் இந்த வைரஸ், கோழி மற்றும் வாத்துகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன. பொதுவாக பறவைகளின் இடப்பெயர்வு காலத்தில் இந்நோய் பறவைகளை அதிகம் தாக்கும். அந்தவகையில் இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த பறவைக் காய்ச்சல் பரவத்தொடங்கியது. 

 

நாடு முழுவதும் இந்தப் பறவை காய்ச்சலால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், அம்மாநில கால்நடைத் துறையினரின் துரித நடவடிக்கையால் குட்டநாடு, ஆலப்புழா, கோட்டயம், கைப்புழம் உட்படப் பல பகுதிகளில் 40,000க்கும் அதிகமான வாத்துகள் மற்றும் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் அழிப்புப் பணிகள் தொடர்கின்றன. இதன் காரணமாகப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் பண்ணை உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை அறிவித்திருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன். இந்நிலையில் கோழி, வாத்து போன்ற பறவைகளின் கறியைச் சாப்பிடலாமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. 

 

இதுகுறித்த உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில், கோழி, வாத்து போன்றவற்றைச் சாப்பிடும் முன்பு, அவற்றைச் சரியான முறையில் சுத்தம் செய்து நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பத்தால் இந்த வைரஸ் அழியும் என்பதால், உணவைக் குறைந்தது 70 டிகிரி செல்சியஸில் வேக வைப்பதன் மூலம் நமது உணவில் உள்ள இந்த கிருமிகள் அழிந்துவிடும் எனக் கூறப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

5 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் அலர்ட்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Bird flu alert for 5 districts!

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன.

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார். 

இந்த நிலையில், ஆந்திரா மாநிலத்திற்கு அருகில் உள்ள 5 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் அலர்ட் விடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆந்திர மாநிலம் நெல்லூரில் கடந்த 17 ஆம் தேதி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்துள்ளது. அதனால், அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.