Advertisment

‘நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன?’ - ஜார்க்கண்ட் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!

What is the status of star candidates Jharkhand vote count status

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று (23.11.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணிக்கும் ஜெ.எம்.எம். தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Advertisment

ஜார்க்கண்டில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 41 ஆகும். இத்தகைய சூழலில் காலை 10.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 33 இடங்களிலும், ஜெ.எம்.எம். தலைமையிலான கூட்டணி 45 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவை 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அதே சமயம் நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் முன்னிலை வகித்தும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் காலை 10.30 மணி நிலவரப்படி பர்ஹெய்ட் தொகுதியில் போட்டியிட்ட ஜார்க்கண்ட் மாநில முதல்வரும், ஜெ.எம்.எம். கட்சியின் வேட்பாளருமான ஹேமந்த் சோரன் முன்னிலை வகித்து வருகிறார்.

Advertisment

கேண்டி தொகுதியில் தொகுதியில் ஜெ.எம்.எம். கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். டும்கா தொகுதியில் போட்டியிட்ட ஜெ.எம்.எம். கட்சியின் வேட்பாளர் பசந்த் சோரன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். ராஞ்சியில் போட்டியிட்ட ஜெ.எம்.எம். கட்சியின் வேட்பாளர் மகுவா மாஜி பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஜார்கண்ட மாநில முன்னாள் முதல்வரும், செராய் கெல்லா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளருமான சம்பாய் சோரன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

ஜம்தாரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சீதா சோரன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். தன்வர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாபுலால் வ்மாரண்டி முன்னிலை வகித்து வருகிறார். லோஹர்தாகா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராமேத்வர் ஓரான் முன்னிலை வகித்து வருகிறார். ஜம்ஷெட்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பன்னா குப்தா பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

Jharkhand congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe