ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் முக்கியத்துவம் என்ன? 

06:10 PM Sep 22, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT



ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (22/09/2021) அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தான் மற்றும் சீன பிரச்சனைகள் முக்கிய அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

உலகத்தையே கரோனா முடக்கிய நிலையில், உலக தலைவர்களின் நேரடி சந்திப்புகளும் முடங்கிப் போயின. இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்குப் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசுகிறார்.

இந்த ஆலோசனைகளின் போது, ஆப்கானிஸ்தான், சீன விவகாரங்கள் முக்கிய இடம் பிடிக்கும் என்று தெரிகிறது. அமெரிக்காவுக்குப் பயங்கரவாத அச்சுறுத்தல் ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் சீனா பெரும் பிரச்சனையாக உள்ளது. அதேநேரத்தில், இந்திய எல்லைப் பகுதியில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சீனா, நேபாளம் மற்றும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி முயற்சி செய்கிறது.

இவை தவிரப் பாகிஸ்தான் மூலம் ஆப்கானிஸ்தானையும் கட்டுப்படுத்த விரும்புகிறது சீனா. இந்த சூழலில் சீனாவின் ஆதிக்கம் தடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பைடன் உடன் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது. பாதுகாப்பு ரீதியான நவீன தொழில் நுட்பங்களை இந்தியாவுக்கு அளிக்கத் தேவையான முயற்சிகளை அமெரிக்க அரசு செய்து வருகிறது.

முன்னாள் அதிபர் டிரம்ப் வணிகம் தொடர்பான கொள்கைகள், விசா விதிகளில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கையாண்டார். பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு டிரம்ப் அமல்படுத்திய விசா விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், இந்தியாவில் கரோனா தடுப்பூசி மூலப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, உடனடியாக வழங்க பைடன் அரசு முன்வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT