What is the reason for the name 'Operation Sindoor'?

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் உள்பட முப்படைகள் கூட்டாக இணைந்து இன்று (07-05-25) நள்ளிரவு 1 மணியளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியா நடத்திய தாக்குதலில், பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது என்ற மிக முக்கியமான பயங்கரவாத தலைமையகம், தரைமட்டமானது. இந்த தாக்குதலை தொடர்ந்து, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 10 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 38 காயமடைந்தாகவும், பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் வைத்த காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில், ஆண்கள் மட்டும் குறிவைக்கப்பட்டதாகவும், இந்துவா? முஸ்லிமா? என்று மதத்தைக் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாயிலாக தகவல் வெளியானது.

What is the reason for the name 'Operation Sindoor'?

பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காகப் பழிதீர்க்கவே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமத்திற்கு, ‘சிந்தூர்’ என இந்தி மொழியில் அழைக்கப்படும். இந்த தாக்குதலில் பல பெண்கள், கண் எதிரில்தங்கள் கணவர்களை இழந்து தங்கள் குங்குமத்தை இழந்துள்ளனர். பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கும், ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.