முத்தம் கொடுக்கவும், மாட்டிறைச்சி தின்பதற்கும் விழா எடுத்து நடத்துவதா? என கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு காட்டமாக பேசியுள்ளார்.

Advertisment

Venki

மும்பையில் கல்லூரி ஒன்றின் விழாவில் கலந்துகொண்ட வெங்கையா நாயுடு, ‘உங்களுக்கு மாட்டிறைச்சி உண்ண விருப்பமென்றால் தாராளமாக சாப்பிடுங்கள், முத்தம் கொடுக்க வேண்டுமா.. விருப்பப்பட்டவருடன் கொடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அதற்கெல்லாம் விழா நடத்தி கொண்டாடுவது நியாயமா? நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு சில கல்லூரி மாணவர்கள் ஆதாரவாகப் பேசுகிறார்கள். இங்கு என்னதான் நடக்கிறது?’ என பேசியுள்ளார்.

Advertisment

கடந்த ஆண்டு மாட்டிறைச்சி விற்பதற்கு மத்திய அரசு தடைவிதித்த போது, சென்னை ஐ.ஐ.டி., கேரளாவின் சில பகுதிகளில் மாட்டிறைச்சி திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.