Skip to main content

என்ன ஆனது 'கவாச்' தொழில்நுட்பம்? - வலுக்கும் கோரிக்கைகள்

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

 What happened to gouache technology; Reinforcement requests

 

ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில் ரயில் விபத்தை தடுக்கும் 'கவாச்' எனும் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்ற குரல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது. ரயில் விபத்துகளை தடுக்கும் கவாச் தொழில்நுட்பம் இந்திய ரயில்வேயில் தற்போது தான் நிறுவப்பட்டு வருகிறது. லோகோ பைலட் ஆபத்துக்குரிய வகையில் ஒரு சிக்னலை மீறி செல்லும்போது இந்த தானியங்கி தொழில்நுட்பமான கவாச் எச்சரிக்கும். எதிர்புறத்தில் ரயில் வந்தாலும் 400 மீட்டர் இடைவெளியில் இரு ரயில்களையும் நிறுத்தி விடும். இது ஒரு தானியங்கி பாதுகாப்பு கருவியாகும். இதை ரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான ஆர்.டி.எஸ்.ஓ உருவாக்கியுள்ளது.

 

nn

 

கடந்த ஆண்டு செகந்திராபாத் ரயில் பாதையில் இதற்கான சோதனையும் செய்யப்பட்டது. கவாச் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட இரு ரயில்களில் ஒரு ரயிலில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் மற்றொரு ரயிலில் வாரிய தலைவர் வி.கே.திருபாதியும் பயணம் செய்து காட்டினர். அப்பொழுது நேர் எதிராக ஒரே டிராக்கில் இயக்கப்பட்ட இரண்டு ரயில்கள் 400 மீட்டருக்கு முன்பாகவே நின்று விட்டது. தற்பொழுது இந்த தொழில்நுட்பத்தை அனைத்து ரயில்வே தடத்திலும் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

 

இந்தியாவில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே இந்த தொழில்நுட்பம் உள்ளதாகவும், அதுவும் தென்னிந்திய ரயில்களில் அந்த பாதுகாப்பு கருவி இல்லை என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது விபத்துக்குள்ளான ரயில்களில் கவாச் கருவி இல்லை என்பதையும் ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே கவாச் தொழில்நுட்பத்தை பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.