Skip to main content

பூஸ்டர் தடுப்பூசிக்கு எந்த டோஸ்?

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

fg

 

 

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசிக்குப் பூஸ்டர் டோஸ்களை செலுத்த தொடங்கியுள்ளன. இதனையொட்டி இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழலில், அண்மையில் இதுதொடர்பாக விவாதிக்க கூட்டம் நடைபெற்றது. ஆனால், அதில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி வரும் 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். மேலும் 15 முதல் 18 வயது உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

 


இந்நிலையில், தற்போது எந்த கம்பெனி தடுப்பூசி, பூஸ்டர் டோசாக போடப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு மத்திய அரசு தற்போது விளக்கமளித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி எந்த கம்பெனி டோஸ் போடப்பட்டதோ அதே டோஸ் மீண்டும் பூஸ்டர் டோஸ் ஆக போடப்படும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.  கோவாஸின் போட்டவர்களுக்கு கோவாக்ஸின் டோஸும், கோவிஷீல்டு போட்டவர்களுக்கு அதே மருந்து மீண்டும் போடப்படும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீரம் நிறுவனத்தின் புதிய தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகால அனுமதி!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

WORLD HEALTH ORGANISATION

 

அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் தடுப்பூசியை, இந்தியாவில் தயாரித்துவரும் சீரம் நிறுவனம், அமெரிக்காவின் நோவாவாக்ஸ் மருந்து நிறுவனம் தயாரித்துவரும் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் கோவோவாக்ஸ் என்ற பெயரில் தயாரித்துவந்தது. இந்நிலையில், இந்த தடுப்பூசிக்கு நேற்று (17.12.2021) உலக சுகாதார நிறுவனம் அவசரகால அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

மேலும் இந்தக் கோவோவாக்ஸ் தடுப்பூசி, கோவாக்ஸ் திட்டத்தில் இருப்பதாகவும், இதற்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முயற்சியை ஊக்கப்படுத்துமென உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்தக் கோவோவாக்ஸ் தடுப்பூசி, இரண்டு டோஸ்களை உடையது. குழந்தைகளுக்கான கோவோவாக்ஸ் தடுப்பூசி இன்னும் ஆறு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் சீரம் நிறுவனம் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியை குழந்தைகள் மீது பரிசோதிக்க நிபுணர் குழு எதிர்ப்பு - காரணம் என்ன? 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

serum institute of india

 

அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசியை, இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவாவாக்ஸ் என்ற பெயரில் தயாரித்துவருகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தக் கோவாவாக்ஸ் தடுப்பூசிக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி பெற சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

இந்தநிலையில், சமீபத்தில் கோவாவாக்ஸ் தடுப்பூசியை, 2 முதல் 17 வயத்திற்குட்பட்டோர் மீது பரிசோதனை செய்ய சீரம் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த சூழலில், கோவாவாக்ஸை 2 - 17 வயதானோர் மீது பரிசோதிக்க மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

சீரம் நிறுவனத்தின் விண்ணப்பம் குறித்து ஆலோசித்த மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு, "கோவாவாக்ஸ் தடுப்பூசியின் மூல பதிப்பான நோவாவாக்ஸ் தடுப்பூசி இதுவரை எந்த நாட்டிலும் அனுமதி பெறவில்லை என்பதால், குழந்தைகள் மீது கோவாவாக்ஸ் தடுப்பூசியைப் பரிசோதிக்க அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்க, தற்போது கோவாவாக்ஸ் தடுப்பூசியைக் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்டோர் மேல் செய்யப்படும் சோதனையின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தரவை சீரம் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்" என கூறியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.