Skip to main content

பிரதமர் மேற்கோள் காட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
What does the Supreme Court judgment cited by the Prime Minister say

பிரதமர் மோடி நேற்று (04-03-24) ஒருநாள் பயணமாகத் தமிழகம் வந்து கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையில் கோர் லோடிங் பணியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். அதன்பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து சாலை மார்க்கமாக நந்தனம் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெற்ற பாஜகவின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

அதில் பேசிய அவர், “காங்கிரஸ், தி.மு.க மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஊழலில் ஊறிப்போய் உள்ளன. அவர்களுக்கு அவர்களுடைய குடும்பம் தான் எல்லாம். ஊழல்தான் அனைத்தும். பல தசாப்தங்களாக, இப்படிப்பட்ட அரசியலை செய்து பழகிவிட்டன. இதன் காரணமாக தான், நமது தேசிய இளைஞர்கள், அரசியல் மீது வெறுப்படைந்துள்ளனர். நேற்று வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு, தூய்மையான அரசியலுக்கு பெரும் உந்து சக்தியாக இருக்கும்” என்று கூறினார்.

பிரதமர் மேற்கோள் காட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விவரம்:- 

கடந்த 1993ஆம் ஆண்டு, பிரதமராக பொறுப்பு வகித்து வந்த நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, அந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பதற்காக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த சிபுசோரன் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், சிபுசோரன் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இதனையடுத்து, கடந்த 1998ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நாடாளுமன்ற அவையில் பேசவோ, ஓட்டு போடவோ லஞ்சம் வாங்கும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு தொடர்வதில் இருந்து அரசியல் சட்டத்தின் 105 (2) மற்றும் 194 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் சட்ட பாதுகாப்பு அளிப்பதாக’ தீர்ப்பு அளித்தது. 

What does the Supreme Court judgment cited by the Prime Minister say

இந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில், மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், சிபுசோரனின் மருமகனும், அப்போதைய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏவுமான சீதா சோரன், லஞ்சம் பெற்றுக்கொண்டு அணி மாறி வாக்களித்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில், சி.பி.ஐ சீதா சோரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையே, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீதா சோரன் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அவர் அளித்த அந்த மனுவை, ஜார்க்கண்ட் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

அதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து சீதா சோரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவில், ‘கடந்த 1998ஆம் ஆண்டில் வெளியான தீர்ப்பில் தனது மாமனார் சிபுசோரனுக்கு உச்சநீதிமன்றம் அளித்த சட்ட பாதுகாப்பு எனக்கும் பொருந்தும். எனவே, அரசியலமைப்பு சட்டம் 194 (2)ன்படி, ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்வதில் இருந்து விலக்கு வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

What does the Supreme Court judgment cited by the Prime Minister say

இந்த மனுவை ஜார்க்கண்ட் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இதன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு நேற்று (04-03-24) இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், ‘கடந்த 1998ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புப்படி, லஞ்சம் வாங்கும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் சட்ட பாதுகாப்பு கோர முடியுமா என்ற சர்ச்சையின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்யப்பட்டது. அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றத்திற்கு உடன்பாடு இல்லை. எனவே, அது நிராகரிப்படுகிறது. 

1998ஆம் ஆண்டின் தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் 105 (2), 194 (2) ஆகிய பிரிவுகளுக்கு முரணாக உள்ளது. உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி முடிவு எடுத்து பேசலாம், வாக்களிக்கலாம். ஆனால், அதற்கு லஞ்சம் வாங்கினால், அது அவரது விருப்பத்தை பிரதிபலிக்காது. லஞ்சம் வாங்குவது குற்றம். லஞ்சம் வாங்கியவுடனே அவருக்கான சட்ட பாதுகாப்பு விலகிவிடுகிறது. எனவே, அவர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவதில் இருந்து சட்ட பாதுகாப்பு கோர முடியாது. மேலும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், அவைகளில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் லஞ்சம் பெற்றால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்படும்’ என்று தெரிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'என் நண்பர் மீது தாக்குதல்'-பிரதமர் மோடி கண்டனம்

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
 'Attack on my friend'-PM Modi condemns

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அங்கு தேர்தல் பரப்புரை அமெரிக்காவில் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் அதிபர் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் அதிபர் ஒபாமா 'நமது ஜனநாயகத்தில் அரசியல் சார்ந்த வன்முறைகளுக்கு இடம் இல்லை. ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்' என தெரிவித்துள்ளார். அதேபோல் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் 'டிரம்பிற்கு தனது முழு ஆதரவை அளிப்பதாகவும் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறை தலைமை அதிகாரி பதவி விலக வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஒ சுந்தர் பிச்சை, அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டின் போது அவருடைய ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட  ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 'Attack on my friend'-PM Modi condemns

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'என்னுடைய நண்பர் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசியலிலும்,ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை' என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் மனு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Supreme Court ordered bail to Arvind Kejriwal Petition Against Arrest

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாக அறிவித்த உச்சநீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். 

இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘90 நாட்களுக்கு மேலாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் துயரப்பட்டிருக்கிறார். பிணையில் இருந்து ஒருவர் வெளியே வருவதற்கும், அவரிடம் விசாரணையை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தேவைப்படும் போது விசாரணையை நடத்தலாம். பிணையில் இருந்து அவர் வெளியே வந்தால் அவரிடம் விசாரணையை நடத்த முடியாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாநிலத்தில் முதல்வராக இருக்கிறார். அவருக்கென்று சில உரிமைகள் இருக்கிறது. 90 நாட்களுக்கு மேலாக அவர் சிறையில் இருக்கிறார். ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவராக இருக்கிறார். அவரை கைது செய்துதான் விசாரணை நடத்துவது என்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது” என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.