Skip to main content

தீபாவளிக்கு மக்கள் கூகுளில் தேடியது என்ன? 

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

What did people search on Google for Diwali?

 

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 12 மற்றும் 13ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினர். அதேசமயம், உ.பி. மாநிலம் அயோத்தியில் சுமார் 24 இலட்சம் அகல் விளக்கை ஒரே சமயத்தில் ஒளிரவிட்டு, கின்னஸ் சாதனை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அங்கு ஏழ்மை நிலையில் இருக்கும் சிறுவர்கள் அந்த விளக்கில் இருந்து எண்ணெய்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது உ.பி. மட்டுமின்றி இதே ஏழ்மை நிலையில் நாடு முழுக்க பலர் தங்கள் தீபாவளியைக் கழித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

இது ஒருபுறம் இருக்க, பண்டிகை அல்லது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போதும் நமது மக்கள் கூகுளை நாடுவது மரபாகவே மாறிவிட்டது. இந்நிலையில், இந்த தீபாவளிக்கு மக்கள் அதிகளவில் கூகுளில் என்ன தேடினர் என்பதை கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை வெளியிட்டுள்ளார். 

 

What did people search on Google for Diwali?

 

கூகுளில் அதிகம் தேடப்பட்டத்தில் முதல் 5 இடத்தைப் பிடித்த தேடலை அவர் வெளியிட்டுள்ளார். அதிலும், ஏன் எனும் கேள்வியுடன் தேடப்பட்டதை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, கூகுளில் இந்த தீபாவளிக்கு மக்களால் அதிகம் தேடப்பட்டவை; 

 

1. இந்தியர்கள் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்?


2. தீபாவளிக்கு ஏன் ரங்கோலி வரைகிறோம்?


3. தீபாவளி அன்று ஏன் விளக்கு ஏற்றுகிறோம்?


4. தீபாவளி அன்று ஏன் இலட்சுமி பூஜை செய்கிறோம்?


5. தீபாவளி அன்று ஏன் எண்ணெய் குளியில் எடுக்கிறோம்?


எனும் ஐந்து விஷயங்களை மக்கள் அதிகளவில் தேடியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு; தொடங்கிய 5 நிமிடத்தில் காலி

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Diwali Train Ticket Booking; Empty within 5 minutes of start

தீபாவளிக்கான சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் ஐந்து நிமிடத்திலேயே டிக்கெட்டுகள் காலியானது.

இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை வர இருக்கும் நிலையில் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சிறப்பு டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. டிக்கெட் விற்பனையானது தொடங்கிய ஐந்து நிமிடத்திலேயே முழுமையாக விற்று தீர்த்தது. இணையதளம் வாயிலாக டிக்கெட் புக்கிங் செய்ய காத்திருந்தவர் பெரும்பாலும் காத்திருப்பு பட்டியலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்கள் வழியாக பயணிகள் தீபாவளி பயணத்திற்கு டிக்கெட்டுகளை வாங்கினர். குறிப்பாக கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் ஐந்து நிமிடத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் காலியானது.

Next Story

விரைவில் முதல்வரைச் சந்திக்க இருக்கும் கூகுள் அதிகாரிகள்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Google officials who will meet the Prime Minister soon

தமிழகத்தில் கூகுள் நிறுவனத்தின் செல்போன் தயாரிக்கும் ஆலை உருவாக இருக்கும் நிலையில் விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூகுள் அதிகாரிகள் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் சென்னையில் விரைவில் கூகுள் நிறுவனத்தின் 'பிக்சல்' செல்போன் தயாரிப்பு நிறுவனம் முதல் முறையாக அமைகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி இருந்தது. பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிப்பு நிறுவனம் அமைய உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கை வைத்து மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து முதலீட்டாளர்களை ஈர்த்து தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியிருந்தது. இதனால் தமிழகத்தில் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கா சென்றுள்ள நிலையில் உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமையில் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், இந்தப் பேச்சுவார்த்தையின் பயனாக கூகுள் நிறுவன அதிகாரிகள் கூகுள் பிக்சல் செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை சென்னையில் அமைக்க முன்வந்துள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க கூகுள் அதிகாரிகள் சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.