Advertisment

கரோனா தொற்று; லேசான மற்றும் கடும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் என்னென்ன?

What are the symptoms of mild, severe infections of the corona infection?

Advertisment

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தற்போது குறைந்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்த சூழலில்கரோனா தொற்று லேசான பாதிப்பு, கடும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்துப் பார்ப்போம்!

கரோனா லேசான பாதிப்புகளுக்கான அறிகுறிகள்!

1.வறட்டு இருமல், சளி, தொண்டைப் புண்.

2.குளிர், லேசான காய்ச்சல்.

3. கடும் சோர்வு, வாசனை மற்றும் சுவை இழப்பு.

4. உடல்வலி, உடற்சோர்வு மற்றும் தலைவலி.

5. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி.

6. காதிரைச்சல், விழிகளில் ஏற்படும் இளஞ்சிவப்பு நிறம், வாய்ப்பகுதிகள் உலர்தல்.

கரோனா கடும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள்!

1. தொடர் காய்ச்சல்.

2. நிலையற்ற ஆக்சிஜன் அளவு, நெஞ்சுவலி.

3. தோல் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சுத் திணறல்.

4. அஜீரணம், நாள்பட்ட குடல் வலி.

Advertisment

5. முக்கிய உறுப்புகள் செயல்படுவதில் பாதிப்பு, குழப்பம், சுயநினைவற்ற உளறல்.

6. பக்கவாத அபாயம் மற்றும் ரத்த உறைவு அபாயங்கள்.

7. உதடுகளில் நிறமாற்றம், வெளிறிய தோல், ஆக்சிஜன் அளவு 90- க்கும் கீழ் குறைதல்.

8. தொடர்ந்து அதிக காய்ச்சல், நுரையீரல் தொற்று.

9. இதயத்துடிப்பில் மாற்றம், குடல் செயல்பாடுகளில் மாற்றம் மற்றும் பசியின்மை.

coronavirus Doctors India patients
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe