Advertisment

புதுச்சேரி கடற்கரையில் கரை ஒதுங்கிய  திமிங்கலம்!!

 Whale stranded off the coast of Pondicherry

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள வம்பாகீரப்பாளையம் கடற்கரையில் சிறிய வகை மோராக்சி என்கிற திமிங்கல வகை மீன் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இந்த வகை திமிங்கல மீன்கள் வலையில் சிக்காது என்றும்,இது தவறுதலாக ஏதாவது சாப்பிட்டு இருந்திருக்கலாம் என்றும் அதனால் அது கரை ஒதுங்கி உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisment

இதுகுறித்து தகவல் பரவியதும் அருகில் உள்ளவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். மேலும் சிறுவர்கள் கயிற்றை கட்டி இழுத்து பார்த்து விளையாடினர். கரையில் நீர் வரும்போது தள்ளிவருவதும், மீண்டும் கடலுக்குள் இழுத்து செல்வதுமாக இருந்தது. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, இதுபோன்று அரியவகை மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது கிடையாது. இதனால் மக்கள் இதனை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர் என்றனர்.

Advertisment

sea Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe