ADVERTISEMENT

வயிற்றுவலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்... வயிற்றுக்குள் இருந்த 1.5 கிலோ ஆபரணங்கள்...

11:26 AM Jul 25, 2019 | kirubahar@nakk…

வயிற்று வலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து 1.5 கிலோ ஆபரணங்களை அறுவைசிகிச்சை செய்து மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ள சம்பவம் மேற்குவங்கத்தில் நடந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்குவங்கம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 26 வயதான பெண் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் அவரின் வயிற்றுக்குள் ஏராளமான உலோகப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதன்படி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவைசிகிச்சையின் முடிவில் அப்பெண்ணின் வயிற்றில் இருந்து வளையல்கள், மூக்குத்திகள், கடிகாரங்கள், செயின்கள், மோதிரங்கள் உள்ளிட்ட 1.5 கிலோ ஆபரணங்கள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் ரூ.5. ரூ.10 என மொத்தம் 90 நாணயங்களும் அகற்றப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் செம்பு மற்றும் பித்தளையால் ஆன பல பொருட்களும் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய அப்பெண்ணின் தயார், "எனது மக்கள் சிறிதுகாலம் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாள். அப்போது எனது சகோதரரின் கடையிலிருந்து ஆபரணங்களை எடுத்துள்ளார். கடையில் பொருட்களை காணாமல் போவது குறித்து அவரிடம் கேட்டால் உடனே அழத்தொடங்கிவிடுவார். தற்போதுதான் அந்த நகைகளை அவர் விழுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது" என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT