இந்தியாவில் மும்பை, கொல்கத்தா நகரங்களில் பாலியல் தொழிலுக்கு அனுமதி உண்டு. அப்படி அதிகாரபூர்வமாக விபச்சாரம் அனுமதிக்கப்பட்ட பகுதிதான் வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோனா கஞ்ச். பாலியல் தொழிலாளிகள் நேபாளம், வங்காளத்திலிருந்து தஞ்சம் புகும் இடம் இதுதான். ஆனாலும், கொல்கத்தாவில் அனுமதிக்கப்படாத தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பாலியல் தொழில் நடப்பதும், காவல்துறையினர் சோதனை நடத்துவதும் தொடரவே செய்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kolkatta redlight 3333.jpg)
அப்படித்தான், ஜாதவ்பூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இளவரசர் அன்வர்ஷா சாலையிலுள்ள ஒரு பிளாட்டிலும், பவானிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகவான் மகாவீர் சாரணியிலுள்ள குடும்ப சலூன் மற்றும் ஸ்பா ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தியதாக கடந்த 9- ஆம் தேதி காவல் துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 7- ஆம் தேதி இரவு நகர காவல் துறையின் மனித கடத்தல் தடுப்பு பிரிவு இரண்டு அழகு நிலையங்கள் மற்றும் இரண்டு வளாகங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 29 பாலியல் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். விபச்சார மேலாளர்கள், பாலியல் தொழில் தரகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களில் பலரும் வற்புறுத்தல் அல்லது பலவந்தம் அல்லது வறுமையின் காரணமாகவே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். உலகின் புராதனமான தொழில் என்றாலும், பாலியல் தொழிலால் உடலளவிலும், மனதளவிலும் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவது பெண்களே!
Follow Us