
உறவினர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பஸ்ஸிம் பார்தமன் மாவட்டத்தில் உள்ள குரிலியடங்கா என்ற பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் வீட்டிலுள்ள படுக்கையறையில் சடலமாகக் கிடந்துள்ளனர். 40 வயதாகும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கணவர் தூக்கிட்ட நிலையிலும், அவரின் மனைவி, 10 வயது மகன், 2 வயது மகள் ஆகிய மூவரும் படுக்கையிலும் சடலமாகக் கிடந்துள்ளனர்.
இவர்கள் 4 பேரின் மரணம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாகக் கிடந்த குடும்பத்தினருக்கு அவர்களது உறவினர்கள் சொத்து பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.