rajnath singh

Advertisment

சாரதா சிட்ஃபண்ட் மோசடி வழக்கில் சிபிஐ விசாரணையை மம்தா தடுத்து நிறுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது, கடமையை செய்ய கொல்கத்தா சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, மாநில காவல்துறையினரால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் நடந்த இந்த நிகழ்வு வரலாற்றில் எங்கும் நிகழாதது என்று கூறினார்.

இதனிடையே, இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.