Advertisment

துருக்கியில் திருமணம் செய்துகொண்ட இந்திய எம்.பி... வைரலாகும் புகைப்படங்கள்...

பிரபல இளம் வங்காள நடிகையும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி யுமான நுஸ்ரத் ஜஹான் நேற்று துருக்கியில் தனது காதலரான நிகில் ஜெயினை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Advertisment

west bengal mp nusrat jahan married in turkey

ஏராளமான வங்க மொழி படங்களில் நடித்து பிரபலமான சமீபத்தில் மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஷிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவரும் பிரபல தொழிலதிபர் நிகில் ஜெயினும் காதலித்து வந்த நிலையில், இவர்கள் நேற்று திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணம் துருக்கியில் உள்ள போட்ரம் என்ற இடத்தில் நடந்தது. இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர்.

Advertisment

திருமணம் காரணமாக துருக்கி சென்றுள்ளதால் நுஸ்ரத் ஜஹான் இன்னும் எம்.பியாக பதவியேற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

tmc turkey west bengal
இதையும் படியுங்கள்
Subscribe