மேற்குவங்க மாநில அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக் என்பவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க அமைச்சரவையில் ஜோதிபிரியா மல்லிக் என்பவர் வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த புகாரின் பேரில் அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் மருத்துவப் பரிசோதனைக்காக ஜோகா இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.