திருத்தம் செய்யப்பட்டு வந்த புதிய வாக்காளர் அடையாள அட்டையில், தனது புகைப்படத்திற்குப் பதிலாக நாயின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதாக முதியவர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisment

west bengal man gets voter id with dogs photo in it

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள ராம் நகர்ப் பகுதியில் வசிப்பவர் சுனில் கர்க்கர். இவர் தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக விண்ணப்பித்திருந்துள்ளார். இந்நிலையில், திருத்தப்பட்ட தனது வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்ற அவர், அதில் தனது புகைப்படத்திற்குப் பதிலாக நாய் ஒன்றின் புகைப்படம் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து குழப்பமடைந்த அவர், இந்த தவறு குறித்து புகாரளித்துள்ள நிலையில், அவரது புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது எனவும், விரைவில் அவர் சரியான புகைப்படத்துடன் சரிசெய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவார் எனவும் அதிகாரிகள்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.