West Bengal Kolkata Acropolis Mall incident

Advertisment

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அக்ரோபோலிஸ் மாலில் தீடிரென யாரும் எதிர்பாராத வேளையில் தீ விபத்து ஏற்பட்டது. 4 வது மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென பிறபகுதிகளுக்கும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டுள்ள வளாகத்தில் பலர் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கண்ணாடியால் அமைக்கபட்டுள்ள வணிக வளாகத்திற்குள் புகை மூட்டம் சூழ்ந்திருப்பதால் வளாகத்தைசுற்றிலும் உள்ளவர்களுக்கும்வளாகத்திற்குள் இருப்பவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஜாதவ்பூர் பிரிவு போலீஸ் டிசிபி பிதிஷா கலிதா தாஸ்குப்தா கூறுகையில், “தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தச் சம்பவம் குறித்து எதுவும் கூற முடியாது” எனத் தெரிவித்துள்ளார். வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.