Advertisment

“சட்டவிரோத செயல்களில் மம்தா ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்”- மேற்கு வங்க ஆளுநர் கண்டனம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.

Advertisment

jagdeep thankar

இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களோடு சேர்ந்து மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் ரெட் ரோட்டில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சிலையிலிருந்து தொடங்கி ஜோராசங்கோ தாகுர்பாரி வரை பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisment

அப்போது பேசிய மம்தா, "பாஜக மட்டுமே இங்கு நிலைத்திருக்க வேண்டுமென நினைக்கிறது. மற்ற அனைவரையும் அவர்கள் வெளியேறச் செய்வார்கள். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இந்தியா அனைவருக்கும் உரியது. டெல்லி முதல்வர் இந்த திட்டத்தை அனுமதிக்கப்போவதில்லை என கூறியிருக்கிறார். மத்தியப்பிரதேச முதல்வர், பஞ்சாப் முதல்வர், சத்தீஸ்கர், கேரளா முதல்வர் ஆகியோரும் இதனை அனுமதிக்கப்போவதில்லை என கூறியுள்ளனர். இதே போல அனைவரும் கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மம்தாவின் இந்த செயலுக்கு மேற்கு வங்க கவர்னர் ஜெக்தீப் தங்கர் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில், “இந்த நாட்டின் சட்டமான குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முதல்-மந்திரியும், மந்திரிகளும் தெருக்களில் ஊர்வலம் செல்வதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளை தவிர்த்து விட்டு, மாநிலத்தில் இயல்பு நிலையை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

west bengal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe