"தலைமை செயலாளரை விடுவிக்க முடியாது" - பிரதமருக்கு மம்தா கடிதம்!

mamata - modi

வங்கக்கடலில் உருவாகி ஒடிசா மற்றும் மேற்கு வங்கம்இடையே கரையைக் கடந்த யாஷ் புயலால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வுசெய்தபிரதமர் மோடி, சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்திற்கு வருகைதந்தார். அங்கு அவரும், மேற்கு வங்கமுதல்வரும் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்துவதாகஇருந்தது. ஆனால் மம்தாவும்மேற்கு வங்க தலைமைச் செயலாளரும் இந்தக் கூட்டத்திற்குத் தாமதமாக வந்ததாகவும், வந்தவுடன் கிளம்பிவிட்டதாகவும்சர்ச்சை எழுந்தது.

பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம்முடிந்த சில மணிநேரங்களிலேயே, மேற்கு வங்க தலைமைச் செயலாளர்அலபன் பாண்டியோபாத்யாய் இடமாற்றம் செய்யப்பட்டு, மத்திய அரசுப் பணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டார். இன்று காலை (31.05.2021) 10 மணிக்கு டெல்லி நார்த் ப்ளாக்கில் பணியில் சேரவும்அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, பிரதமரின் அனுமதியுடன்தான் கூட்டத்திலிருந்து சென்றதாக விளக்கமளித்ததோடு, பிரதமரை கடுமையாக விமர்சித்தார். மேலும், தலைமைச் செயலாளரை மத்திய அரசுப் பணிக்கு அழைக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்என கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில், மம்தா பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், ‘இந்த முக்கியமான நேரத்தில் மேற்கு வங்க அரசால் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது.’ விடுவிக்கவுமில்லை என தெரிவித்துள்ளதோடு, தலைமைச் செயலாளரைத் திரும்ப அழைக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்து, இரத்துசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Chief Secretary Mamata Banerjee Narendra Modi west bengal
இதையும் படியுங்கள்
Subscribe