ADVERTISEMENT

மம்தாவை எதிர்த்து மீண்டும் சுவேந்த் அதிகாரி..? - அனல் பறக்கும் மேற்கு வங்க இடைத்தேர்தல்!

07:22 PM Sep 06, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் சுவேந்த் அதிகாரி மம்தாவைத் தோல்வியடையச் செய்தார். இருப்பினும், அம்மாநில முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட மம்தா, நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம், மேற்கு வங்கத்தின் சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் மற்றும் பவானிபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. பவானிபூர் தொகுதியில் இந்த முறை திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர், மம்தா பானர்ஜி அங்குப் போட்டியிட வசதியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதியில் மம்தா போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், அவரை நந்திகிராமில் தோல்வியடையச் செய்த சுவேந்து அதிகாரி, கட்சி கட்டளையிட்டால் மீண்டும் மம்தாவை எதிர்த்து பாவானிப்பூரில் போட்டியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT