Advertisment

"என்னைச் சுட்டுக்கொல்ல முயற்சித்தார்" - பாஜக எம்.பி பரபரப்புக் கடிதம்...

west bengal bjp mp letter to governor

மேற்கு வங்கம் மாநிலம் பர்ராக்பூர் தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன் சிங், காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னைச் சுட்டுக்கொல்ல முயலுவதாக அம்மாநில ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்மையில் பா.ஜ.க.வில் சேர்ந்தார் அர்ஜுன் சிங். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பர்ராக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கருக்கு அர்ஜுன் சிங் எழுதிய கடிதத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உத்தரவின் படி, இணை கமிஷ்னர் அஜய் தாகூர், தன்னையும் தனது குடும்பத்தையும் நேற்று துப்பாக்கியால் சுட முயன்றதாகப் புகாரளித்துள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் அவர் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தக் கடிதம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

west bengal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe