west bengal bjp leader Manish Shukla passed away

Advertisment

மேற்கு வங்கத்தின் பாரக்போர் மாவட்ட பாஜக குழு மூத்த தலைவரான மனிஷ் சுக்லா நேற்று இரவு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொல்கத்தாவின் அருகே உள்ள பாரக்போர்நகரில் உள்ள காவல் நிலைய வாசலில் உள்ளூர் கட்சி நிர்வாகிகளிடம் நேற்றிரவு பேசிக்கொண்டு இருந்துள்ளார் மனிஷ் சுக்லா. அப்போது அப்பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று மனிஷ் சுக்லா மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடியது.

இதில் படுகாயம் அடைந்த மனிஷ் சுக்லா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். மனிஷ் சுக்லா கொல்லப்பட்டதற்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரே காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ள நிலையில், அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. மேலும், கொலைக்கு நீதி கேட்டு பாஜக சார்பில் 12 மணிநேர முழு அடைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.