Advertisment

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

west bengal assembly election final polls voters

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் ஏற்கனவேஏழு கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 35 சட்டமன்றத் தொகுதிகளுக்கான எட்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (29/04/2021) காலை 07.00 மணிக்குத் தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

Advertisment

இறுதிக்கட்ட வாக்குப்பதிவில், 35 பெண் வேட்பாளர்கள் உட்பட 283 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 11,860 வாக்குச்சாவடிகளில் 84,77,728 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிகளில் மாநில காவல்துறையினருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

west bengal assembly election final polls voters

இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே2ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், இவற்றுடன் நடந்த சில மாநில சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும், மே 2 அன்றே வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு இன்று வெளியாகிறது!

மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (29/04/2021) மாலையுடன் நிறைவடைய உள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகிறது.

Assembly election mamta banarji voters west bengal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe