Welcome to the young man who showed his gun during the riot ... Viral video!

டெல்லி கலவரத்தின்போது துப்பாக்கியைஎடுத்து போலீசாரை நோக்கி சுட பாய்ந்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் பரோலில் வந்த அந்த இளைஞனுக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த கலவரத்தின்போது துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுடுவது போல் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஷாருக் பதான். இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் நான்கு மணிநேர பரோலில் தந்தையைக் காண்பதற்காக இன்று வீட்டிற்கு வந்தார். அப்போது தெருவிலிருந்த மக்கள் அவருக்குஉற்சாகமாக வரவேற்பளித்தனர். அந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.