உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன், மனைவி இடையே விவகாரத்துக்கு காரணமாக லட்டு அமைந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

weird divorce case in uttarpradesh

உத்தரப்பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்த இந்த தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகளும் இருக்கிறது. இந்த நிலையில் அந்த கணவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அப்போது அவரின் மனைவி, ஒரு மந்திரவாதியிடம் சென்று கணவரின் உடல்நிலை சரியாக ஆலோசனை கேட்டுள்ளார்.

Advertisment

அதற்கு அந்த மந்திரவாதி, தினமும் கணவருக்கு காலையில் 4 லட்டுகளும், மாலையில் 4 லட்டுகளும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் எந்த உணவும் தரக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார். மந்திரவாதியின் இந்த ஆலோசனைப்படி கடந்த சில மாதங்களாக கணவனுக்கு வெறும் லட்டுக்களை மட்டுமே சாப்பிட தந்துள்ளார் அந்த மனைவி. இதனால் வெறுத்துப்போன அந்த கணவன் விவாகரத்து வேண்டும் என கூறி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த கணவர், " எனக்கு கடந்த சில மாதங்களாக லட்டுக்களைத் தவிர வேறு எதையும் எனது மனைவி சாப்பிட கொடுப்பதில்லை. மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு காலையில் 4 லட்டுகள், மாலையில் 4 லட்டுகள் மட்டுமே தருகிறார். இடைப்பட்ட நேரத்தில் எதுவுமே சாப்பிடத் தருவதில்லை. இனியும் என் மனைவியுடன் என்னால் வாழமுடியாது, அதனால் விவகாரத்து கோரியுள்ளேன்" என பாவமாக கூறியுள்ளார்.

Advertisment

இருவருக்கும் கவுன்சிலிங் அளிக்கும் ஆலோசகர் இதுகுறித்து கூறுகையில், " கணவன், மனைவி இருவரிடமும் பேசினோம். அந்த பெண் சிலமூட நம்பிக்கையை தீவிரமாக நம்புகிறார். லட்டு சாப்பிடுவதன் மூலம் தனது கணவரின் உடல்நிலை சரியாகும் என நம்பித்தான் தொடர்ந்து அவருக்கு லட்டை மட்டுமே கொடுத்துள்ளார். மற்றவற்றை ஏற்க மறுக்கிறார்" எனத் தெரிவித்தார்.