/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pm3232.jpg)
கரோனா, ஒமிக்ரான் அச்சுறுத்தல் இருந்த போதும் நாடெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெற்றன.
சுற்றுலா சொர்க்கமான கோவாவில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு புதிய ஆண்டை ஆடல், பாடலுடன் வரவேற்றனர். புத்தாண்டையொட்டி, டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடம், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மும்பை கடல் பாலத்தில் லேசர் ஒலிஜாளம் காண்போரைக் கவர்ந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/poo323.jpg)
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயில், கண்கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் வழிபாடுகளுடன் புத்தாண்டை வரவேற்றனர். ராஜஸ்தான் மாநிலம், குல்முகரில் ஆடல், பாடலுடன் மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
'ஒமிக்ரான்' தடுப்பு நடவடிக்கையாக பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, பொது இடங்களில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. குறிப்பாக, டெல்லியில் அரசின் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த ஆயிரக்கணக்கான காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amit434343343.jpg)
குஜராத், காஷ்மீர் மாநிலங்களில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் தங்கள் முகாம்களில் புத்தாண்டை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)