ஹெல்மெட் அணிந்தால்தான் பெட்ரோல்... பேனர் வைத்த காவல்துறைக்கு குவியும் பாராட்டுகள்

நாடு முழுவதும் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்க அரசுகள் பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

wearing helmet becomes mandatory to fill petrol in karnataka

அந்த வகையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படிகர்நாடகாவில் நாளை முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வருகிறது. இதனையொட்டி அம்மாநில போலீசார், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாளை முதல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் ஸ்டேஷன்களில் பெட்ரோல் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த அறிவிப்பு பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

helmet karnataka
இதையும் படியுங்கள்
Subscribe