Advertisment

ஆதார் கொண்டு வந்தால் தான் பிரசவம் பார்ப்போம்; வலியில் துடித்த பெண் உயிர்விட்ட சோகம்

We will see delivery only if we bring Aadhaar; It is sad that the woman passed away in pain

கர்நாடக மாநிலம்,தும்கூர் மாவட்டத்தில் தமிழகத்தைச்சேர்ந்த கஸ்தூரி தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்குமுன் இவரது கணவர் இறந்து விட்டார். நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணாக இருந்த இவருக்கு இரண்டு தினங்களுக்குமுன்பு பிரசவ வலி ஏற்பட்டது.

Advertisment

பிரசவ வலியிலிருந்த அவரை அண்டை வீட்டார், அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கஸ்தூரியிடம் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் இல்லாததால் மருத்துவமனையில் அவரை சேர்த்துக்கொள்ளவில்லை. அக்கம் பக்கத்தினர் மீண்டும் அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், நேற்று காலை பிரசவ வலியால் துடித்த அவரின் சத்தத்தைக் கேட்டுஅக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அங்கு கஸ்தூரியும் அவரது இரட்டைக் குழந்தைகளும் இறந்து இருந்தனர். கஸ்தூரியை மருத்துவமனையில் அனுமதிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe