ADVERTISEMENT

"ஆணைய விசாரணைக்கு செல்ல மாட்டோம்'- உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ வாதம்!

02:05 PM Oct 26, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில், விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று (26/10/2021) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போலோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அதிமுக அரசு சொன்னதால்தான் மருத்துவமனையிலிருந்து சிசிடிவியை அகற்றினோம். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரைவசி தேவைப்படுவதாக அரசு கூறியதால், சிசிடிவியை அகற்றினோம். ஆறுமுகசாமி ஆணையத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது. மருத்துவ ரீதியிலான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறவில்லை. மருத்துவ ரீதியிலான விவரங்களை எந்த அடிப்படையில் நாங்கள் தெரிவிக்க முடியும்? அப்போலோ அளித்த சிகிச்சைகளுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கூட திருப்தி தெரிவித்தனர்.

நிறைய அரசியல் தலைவர்கள் விசாரிக்கப்படாமல் இருக்க மருத்துவர்களை மட்டும் விசாரிப்பது ஒருதலைபட்சமானது. எங்கள் நற்பெயர் சார்ந்த விஷயம் என்பதால் அதனை ஆரம்பத்திலேயே எதிர்க்க உரிமை உண்டு. எங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் கூறுகிறோம்; ஆணையத்தின் முன் ஆஜராக மாட்டோம். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வர்ணனையாளரைப் போல ஆணையம் தன் இஷ்டத்துக்குத் தகவல்களைக் கசியவிட்டது" என்று வாதிட்டார்.

இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “எந்த ஒரு விசாரணை ஆணையத்தின் தகவல்களும் இதுவரை கசிந்ததில்லை” என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT