ADVERTISEMENT

"பிரித்தாளும் முயற்சிகளை முடியடிப்போம்"- எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை! 

09:34 PM Apr 16, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரித்தாளும் முயற்சிகளை முடியடிப்போம் என்றும், வெறுப்புக் கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சித் தருவதாகவும் 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வன்முறை நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், "மக்கள் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தப் பேண வேண்டும். வகுப்புவாத வன்முறைகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உணவு, உடை, நம்பிக்கை, பண்டிகை, மொழியைப் பயன்படுத்தி பிரச்சனையைத் தூண்டுகின்றனர். நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுகள் கவலை அளிக்கிறது. மத ரீதியாகப் பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து அமைதியைக் காக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வெறுப்பு பேச்சைத் தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், அமைதியாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்த உறுதி எடுத்துக் கொள்கிறோம். சமுதாயத்தைப் பிளவுப்படுத்தும் நச்சு தத்துவங்களை எதிர்த்து ஒருங்கிணைந்து தொடர்ந்து போராடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT