chandra

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டிட்லி புயல் ஆந்திரா மற்றும் ஒடிஷா வழியாக மேற்கு வங்கம் நோக்கி கரையை கடந்தது. அப்போது சுறாவளி காற்று மிக வேகமாக வீசியது. சுமார் 126 கிமீ வேகம் வரை வீசியதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த அதிவேக காற்றினால், இந்த இரு மாநிலங்களிலும் பல மரங்கள், மின் கம்பங்கள், கீழே சாய்ந்தது. தங்களின் வீட்டை விட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆந்திராவில் டிட்லி புயல் பாதிப்புக்கு நிதி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி, அனுப்பியுள்ளார். டிட்லி புயல் பாதிப்பை சீர் செய்ய முதற்கட்டமாக ரூ.1200 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.