Skip to main content

"ஏற்றுமதியாளராக இருந்த நாம் இறக்குமதியாளர்களாகியிருக்கிறோம் "-மோடியை தாக்கும் பிரியங்கா காந்தி

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

 

"We used to be exporters, we became importers" - Priyanka Gandhi

 

இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலை முறையாகக் கையாளதது குறித்து மத்திய அரசுக்கு எதிரான கண்டன குரலை தொடர்ச்சியாக எதிரொலித்து வருகிறது காங்கிரஸ். இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவலை  தடுக்கத் தவறி வருவது குறித்தும், தடுப்பூசி தட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பது பற்றியும் பிரதமர் மோடியை விமர்ச்சித்திருக்கிறார்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. இது குறித்துப் பேசியுள்ள பிரியங்கா, "பல ஆண்டு கால அரசின் முயற்சிகளை அழிக்கும் வகையில், தடுப்பூசி ஏற்றுமதியாளராக இருந்த நாம், வலுக்கட்டாயமாக இறக்குமதியாளராக மாறியிருக்கிறோம்.

 

நரேந்திரமோடியின் விமானத்தில் பயணிக்கும் பயணிகளில் யார் ஒருவர், விமானியின் புகைப்படத்தை போர்டிங் பாஸில் ஒட்டியிருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே, ஆபத்தான நேரத்தில் விமானத்திலிருந்து தப்பிக்கும் உயிர்காக்கும் பட்டனை அழுத்த முடியும்” என்று பிரதமர் மோடியை காட்டமாகத் தாக்கியிருக்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்