Skip to main content

'செல்போனுக்கே 6 மணி நேரத்தைச் செலவிடுகிறோம்'-மோடி வேதனை

 

 'We spend 6 hours on cell phones'-Modi laments

 

சராசரியாக  ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்தை செல்போன் பயன்பாட்டிற்கு இந்தியர்கள் செலவிடுவது வேதனை தருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் மேற்கொண்டார். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நேரிலும், காணொளி வாயிலாகவும் சுமார் 38 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு குறித்து ஏற்படும் அச்சம், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து மாணவ மாணவிகள் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்ப, அவைகளுக்கு பிரதமர் பதிலளித்தார். அப்பொழுது பேசிய பிரதமர் மோடி, 'இந்திய மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்தை செல்போன் திரைகளில் செலவிடுகின்றனர். இது கவலைக்குரியது. மின்னணு உபகரணங்கள் மனிதர்களை விட அறிவானவை அல்ல' என்றார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !