''எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம்'' - பிரதமர் மோடி பேட்டி   

publive-image

இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், '' நாடாளுமன்றத்தில் திரௌபதி முர்மு உரையாற்றுவது மிகப்பெரிய கௌரவம். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் உரையை நிகழ்த்துவது நாட்டுக்கே பெருமை. அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமைய உள்ளது. நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக நடப்பு பட்ஜெட் இருக்கும். நாட்டுக்கும் அதன் குடிமக்களுக்கும் முன்னுரிமை அளிப்பதே மத்திய அரசின் நோக்கம். மத்திய பட்ஜெட்டை ஒரு பெண் அமைச்சர் தாக்கல் செய்யவுள்ளதை உலகமே உற்று நோக்க உள்ளது. எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம்'' என்றார்.

தற்பொழுது குதிரைப் படை சூழ இந்தியகுடியரசுத்தலைவர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார். அவரை பிரதமர் மட்டும் மூத்த அமைச்சர்கள் வரவேற்ற நிலையில்சிறிது நேரத்தில் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

budget modi parliment
இதையும் படியுங்கள்
Subscribe